By Jagathisan P
தன்னை சுற்றும் பூமியினை தனித்து வைரமுத்து ஆண்டால்
சின்னமயில் சிறகு கொண்டு செய்த விசிறி வீச ஆசை.
வைரத்தை இலவசமாய் வறியோர்க்கு வழங்க ஆசை
தயிரினையே கடைந்து அதில் தங்கத்தை எடுக்க ஆசை
கடன் பெற்று கடல் கடந்தோர் ,கறுப்பாக்கி வைத்திருப்போர்
உடன் நாட்டிற் கிழுத்து சிறை உள்ளே வைத்துதைக்க ஆசை
கற்பிக்கும் கட்டிடம் மேல் பொற்கூகூரை பதிக்க ஆசை.
சிற்பத்திர்க் குயிர் கொடுத்துஜீன்ஸ் தைத்து போட ஆசை
சாதி மத இனவெறிக்கு தடுப்பூசி போட ஆசை.
வீதியெங்கும் விளக்கு வைத்து வெண்ணில வோடிணைக்க ஆசை.
மின்மினியின் கண்களிலே மின்சாரம் எடுக்க ஆசை
வெண்ணிலவு விடுப்பு நாளில் விளக்கேற்ற கொடுக்க ஆசை
சிலை திருட்டு வழக்கினுக்கு சிவனை சாட்சி ஆக்க ஆசை
வலைப்படகு பிடித்தவரை வளைகுடாவில் தள்ள ஆசை
ராமர் பாலம் மீதினிலே இரத யாத்திரை செல்ல ஆசை.
பூமர் சிறுவன் கை பிடித்து பூமியினை சுற்ற ஆசை.
ஆண்டவனின் பார்வைக்கோர் அகம் டீவி வைத்து நாட்டின்
அவலஙல் பதிய விட்டு கொடுக்க ஆசை.
உறக்கத்தில் வரும் கனவை யூடியூபில் ஏற்ற ஆச
ஊருக்கு நடுவினிலே ஓடைகளை அமைக்க ஆசை.
அரசியலில் உள்ளவர்கள் அனைவருக்கும் ரேஷன் கடை
அரிசியினை சமைத்து உண்ண அரசாணை இயற்ற ஆசை.
கவுரவத்தை காக்கவென்று காதலரை கொல்பவரை
பாண்டவரின் படை கொண்டு பரமனிடம அனுப்ப ஆசை
By Jagathisan P
Comments